விஜயகாந்தின் நண்பன் என்று தெரிந்தும் கூப்பிட்டு வைத்து பங்கமாய் அசிங்கப்படுத்திய வடிவேலு…

vijayakanth
vijayakanth

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் வடிவேலு. அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில பிரச்சனையின் காரணமாக சினிமாவை விட்டு விலகி விட்டார். மேலும் வடிவேலு தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் மீசை ராஜேந்திரன் அவர்கள் வடிவேலை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். அதாவது வடிவேலு அவர்கள் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்று மீசை ராஜேந்திரன் வடிவேலுவை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார்.

அதாவது மீசை ராஜேந்திரன் ஏவிஎம் ஸ்டுடியோவில் இருக்கும் போது வடிவேல் அவர்கள் நாளைக்கு சூட்டிங் வாங்க என்று கூறியுள்ளாராம் அதற்கு மீசை ராஜேந்திரன் அவர்கள் காலை 7:00 மணிக்கெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விட்டாராம்.

படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்து உள்ளாராம் மீசை ராஜேந்திரன் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு நடிகர் வந்து உங்களுடைய காட்சியில் தான் ரவி நடிக்கிறார் என்று கூறியிருக்கிறார் அதன் பிறகு வடிவேலுக்கு சூட்டிங் முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளையில் அவரை போய் நேரில் சந்தித்து இருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

அப்போது வடிவேலு அவர்கள் அவரை உட்காரக் கூட சொல்லவில்லையாம். ஒரு சேரில் காலை போட்டுக் கொண்டு இன்னொரு ஜெரில் சாய்ந்து கொண்டு தெனாவட்டாக உட்கார்ந்து இருந்தாராம். அப்போது மீசை ராஜேந்திரன் நீங்கள் தான் வர சொன்னிங்க என்று கேட்டுள்ளார் அதற்கு வடிவேலு அவர்கள் விஜயகாந்த் உடன் இருக்கவங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடையாது என்று கூறி அவமானப்படுத்தியதாக மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இதற்கு மீசை ராஜேந்திரன் அவர்கள் நீ என்னை கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை ஆனால் என்னை அசிங்கப்படுத்தியது மாதிரி வேற எந்த ஒரு நடிகரையும் அப்படி அசிங்கப்படுத்தாதீங்க என்று மீசை ராஜேந்திரன் வடிவேல் இடம் கூறிவிட்டு சென்று விட்டாராம்.