நடிகர் வடிவேலு அவர்கள் ராஜ்கிரன் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அது மட்டும் அல்லாமல் அந்த படத்தின் மூலம் பிரபலமான நடிகர் வடிவேலு அடுத்தடுத்து திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் வடிவேலு அவர்கள் ஒரு சில பிரச்சனையின் காரணமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். நீண்ட ஆண்டுகள் கழித்து நடிகர் வடிவேலு அவர்கள் தற்போது நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
சினிமாவில் காமெடியனாக ஜொலித்து வந்த நடிகர் வடிவேலு அவர்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் அதிலும் குறிப்பாக சமூக வலைதளத்தில் நடிகர் வடிவேலுவின் மீம்ஸ் தான் கொட்டி கிடக்கிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு அவர்கள் நாய் சேகர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக நடிகர் வடிவேலு அவர்கள் ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இத்தனை ஆண்டுகளாக வடிவேலுவை காமெடி நடிகராக பார்த்து வந்த ரசிகர்கள் முதல்முறையாக வடிவேலு வில்லனாக பார்க்க போகிறார்கள் இதனால் இந்த படுத்திருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதாவது நடிகர் ஜி. பிரகாஷ் நடிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் வில்லனாக நடிக்கிறார் அது மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனர் வடிவேலுவிடம் கதையை கூறி இருக்கிறார் அந்த கதை வடிவேலுக்கு மிகவும் பிடித்து விட்டதாம் இதனால் வடிவேல் அவர்கள் அந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் கொடூர வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.