பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்தையே கதறவிட்ட வடிவேலு.! கையெடுத்து கும்பிட்ட அவலம்!! சூனா பானான்னா சும்மாவா…

vadivelu
vadivelu

80 மற்றும் 90களில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு இவருடைய காமெடிக்கு வேற ஒரு எந்த நடிகராக இருந்தாலும் ஈடாகாது என்ற அளவிற்கு அவருடைய பாடி லாங்குவேஜ் மற்றும் பேச்சுத் திறமை என அனைத்திலும் காமெடியை புகுத்தி சிறப்பாக நடித்து வந்தார்.

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு சிம்பு தேவன் எழுதி இயக்கிய திரைப்படமான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று பல விருதுகளையும்  குவித்தது. அதன் பின்னர் நடிகர் வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

அந்த இடைவேளையில் சந்தானம், சூரி, யோகி பாபு போன்ற பல நகைச்சுவை நடிகர்கள் சினிமாவில் உருவாகி உள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு அவர்கள் மீண்டும் ரீ என்றி கொடுக்கும் விதமாக 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கலாம் என லைக்கா நிறுவனம் முடிவு செய்து இருந்தது அதுமட்டுமல்லாமல் அதற்கான பூஜையும் போட்டு அறிவித்த நிலையில் இப்படத்தின் படபிடிப்பை ஆரம்பிக்கும் முன்பே வடிவேலு அவர்களே இந்த படத்தில் இருந்து விலகினார்.

அதன் பிறகு 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி அல்லது நடிகர் யோகி பாபு நடிப்பார் என பல பேச்சுகள் அடிபட்டது ஆனால் திரைப்படம் அப்படியே நின்றுவிட்டது. அதன் பிறகு தற்போது நடிகர் வடிவேலு அவர்கள் பல திரைப்படங்களில் மீண்டும் நகைச்சுவை நடிகராகவே நடித்து வருகிறார்.

23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்கலாம் என முடிவு செய்த லைக்கா நிறுவனம் வடிவேலு இடம் அணுகியது. ஆனால் முன்பிருந்த வடிவேலு மாதிரி இருப்பார் என்று நினைத்திருந்த லைக்கா நிறுவனம் அதற்கு எதிர்மறாக தற்போது வடிவேலு அவர்கள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக எடுக்க முடியாது இவரை வைத்து என முடிவு செய்து விட்டனர்.

ஆனால் வடிவேல் அவர்கள் மீண்டும் தனது வேலையை காட்டும் விதமாக படப்பிடிப்பிற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு வராமலே விட்டுவிட்டாராம் அதற்குள் லைக்கா தயாரிப்பு நிறுவனமும் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்தின் திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறது.

தொடர்ந்து வடிவேலுவிடம் லைகா நிறுவனம் கையெடுத்து கும்பிட்டு நீங்கள் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டிருக்கிறது அதுமட்டுமல்லாமல் வேற எந்த படங்களிலும் நாங்கள் இனிமேல் இவரை ஒப்பந்தம் செய்ய மாட்டோம் எனவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.