காமெடி நடிகர் வடிவேலு மீது இருந்த பல வழக்குகள் முடிந்து தற்பொழுது அவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் வடிவேலுவின் பெயர்தான் முதலில் எப்பொழுதும் இருக்கும் ஆனால் இவரது நடிப்பில் எந்த திரைப்படமும் கடந்த சில வருடங்களாக வெளியாகாமல் ரசிகர்கள் தவித்து வந்தார்கள்.
இவர் காமெடி நடிகராக நடித்து கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவர் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்து வந்தார்.
இருபத்தி மூன்றாம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் பொழுது இவருக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இவருக்கு ரெட் கார்டு வழங்கி விட்டார்கள்.பின்பு எப்படியோ ஒரு வழியாக சமீபத்தில் தான் இவர் மீண்டும் தமிழ் திரையுலகில் நடிக்கலாம் என உத்தரவு வந்துள்ளதால்.
தொடர்து வரிசையாக திரைப்படங்களை கைப்பற்றி தற்பொழுது நடித்து வருகிறார் இதற்காக வடிவேலு சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பற்றி கூறியுள்ளார் அதில் சுபாஷ்கரன்,சபாஷ் காரனாக மாறிவிட்டார் எனக்கு வாய்ப்புத் தந்த கடவுளுக்கு ரொம்ப நன்றி மக்களுக்கு நன்றி எனக்கு இனிமேல் என்டு காடே கிடையாது என கூறியுள்ளார்.
அத்துடன் எல்லாத்தையும் தாண்டி நான் தப்பித்து விட்டேன் என் மீது இருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் விளங்கிவிட்டது.இனிமேல் ஷங்கர் தயாரிப்பில் இயக்கத்தில் நான் நடிக்கவே மாட்டேன் அதேபோல் வரலாற்று திரைப் படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளாராம்.இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் சினிமாவில்நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.