90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு. தொடர்ந்து டாப் ஹீரோகளின் படங்களில் நடித்து ஓடிய வடிவேலு சமயத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் அந்த படங்களும் அவருக்கு வெற்றி படங்களாக மாறின இந்த சமயத்தில் தான் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஷங்கருடன் வடிவேலுக்கு பிரச்சனை..
ஏற்பட இனி படங்களில் நடிக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. இதனால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கை முடிந்தது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லைகா நிறுவனம் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தது அதன் பிறகு நடிகர் வடிவேலு தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. அண்மையில் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள் கூட வெளிவந்து வைரலானது. இந்த படத்தை தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 என பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் வடிவேலு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி இணைந்து நடிக்கும்..ஒரு புதிய படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க கே.எஸ் ரவிக்குமார் அணுகி உள்ளார் அதற்கு அவர் நடிக்க ஓகே சொன்னாலும் சம்பள விஷயத்தை கேட்டு தான் கே. எஸ். ரவிக்குமார் தற்பொழுது ஷாக்கில் இருக்கிறாராம்.
கே எஸ் ரவிக்குமார் 20 நாட்களுக்கு தேதி கேட்க வடிவேலுவோ ஒரு நாளைக்கு 25 லட்சம் கொடுங்கள் என கேட்டு உள்ளாராம். கே எஸ் ரவிக்குமாரும் அதற்கு ஒத்து வராததால் தற்பொழுது படக்குழு தொடர்ந்து நடிகர் வடிவேலுவிடம் சம்பளத்தை குறைக்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது