பிரபல இசையமைப்பாளர் வீட்டிற்கு சென்று பல விதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்த வைகைப்புயல் வடிவேலு.! இவர் திரைப்படத்தில் இசையமைத்தாலே வெறித்தனமா இருக்குமே.

vadivel

பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகர்தான் வைகைப்புயல் வடிவேலு இவருக்கு இருந்த பல பிரச்சனைகள் நீங்கி தற்பொழுது இவர் மீண்டும் பல திரைப்படங்களில் நடிக்கலாம் என உத்தரவு வந்து விட்டதால் இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி தற்பொழுது படு பிசியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பை பார்ப்பதற்கு மக்களும் மிக ஆர்வமாக இருக்கிறார்கள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் திரை உலகில் வைகைப்புயல் ஆட்டம் ஆரம்பித்து விட்டது என பலரும் கூறி வருகிறார்கள்.

அதேபோல் இவர் சுராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள் ஆனால் பின்பு சதீஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

vadivel
vadivel

இந்த திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் குறிப்பாக இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருவதாகவும் தகவல் கிடைத்த நிலையில் தற்பொழுது வைகைப்புயல் வடிவேலு சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் தீ ஆகியோர்களை வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vadivel

மேலும் இந்த புகைப்படங்களில் வைகைப்புயல் வடிவேலு தனது பழைய போஸ்களை கொடுத்துள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது ஆட்டத்தை நாங்கள் வெறித்தனமாக பார்க்க இருக்கிறோம் சீக்கிரம் பல திரைப்படங்களில் நடித்து வாருங்கள் என கூறி வருகிறார்கள்.