90 காலகட்டங்களில் இருந்து சினிமா உலகில் நடித்துக்கொண்டு வருபவர் வடிவேலு ஆரம்பத்தில் சிறப்பான படங்களில் காமெடியை வெளிக்காட்டி நடித்து வந்த இவருக்கு போக போக பட வாய்ப்புகள் குவிந்தன ஆனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இவருக்கு காமெடி கலந்த ஹீரோ படங்களின் கதையை சொல்ல வடிவேலு ஓகே சொல்லி பல படங்களில் கமிட்டானார்.
அந்த படங்களும் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தர அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தினார் இப்படி ஹீரோவாக ஓடிக்கொண்டிருந்த இவருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் போனார் அதிலிருந்து மீண்டு வந்துள்ள வடிவேலுவை தற்பொழுது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் புக் செய்து வருகின்றனர்.
முதலாவதாக சுராஜ் உடன் இணைந்து “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் அண்மையில் கூட இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது அதைத் தொடர்ந்து இவர் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறார் சமீபத்தில் டாக்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது இந்தப் படம் காமெடியில் பின்னி பெடல் எடுத்ததால் வடிவேலு நெல்சன் திலிப்டிலிப்குமார் உடன் கை கொடுத்தால் மிக சிறப்பாக இருக்குமே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனால் நெல்சன் திலிப்குமார் உடன் பதிலாக வடிவேலு அதிகம் ஆர்வம் காட்டுவது என்னமோ நலன் குமாரசாமி தான். காரணம் நலன் குமாரசாமியும் ஹீரோவை விட காமெடி தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார் அந்த காரணத்தினால் தற்போது வடிவேலும் படத்தில் நடிக்கவே அதிகம் ஆசை காட்டி வருகிறார். அதன்பின் வேண்டுமானால் நெல்சன் போன்ற சிறந்த இயக்குனர்கள் படங்களில் அவர் காமெடியான நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல படங்களில் காமெடியாகவும், ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார் எது எப்படியோ வடிவேலுவின் காமெடி இனி உலகம் முழுவதும் பரவும் என அவரது ரசிகர்கள் கூறிய சந்தோஷத்தில் வலம் வருகின்றனர்.