யார் காலை யார் பிடிக்கிறது.! மெகா ஹிட் திரைப்படத்தை நிராகரித்த வடிவேலு.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.?

vadivelu
vadivelu

நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தில் பிரபல நடிகரின் காலை பிடிப்பது போல் காட்சி வைக்கபட்டிருக்கிறது. அதை கேள்விப்பட்ட வடிவேலு அவருடைய காலை என்னால் பிடிக்க முடியாது தமிழ்நாட்டில் என்னுடைய ரேஞ்சே வேற என்று கூறிவிட்டு அந்த படத்தை நிராகரித்து வெளியேறினார் என்று சினிமா பிரபலம் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் தனுஷ், தமன்னா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் படிக்காதவன். இந்த திரைப்படத்தில் விவேக், சுமன், மயில்சாமி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நடிகர் விவேக் படிக்காதவன் திரைப்படத்தில் அசால்ட் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் விவேக் அவர்களுக்கு முன்பாக நடிகர் வடிவேலு அவர்கள் தான் நடிக்க இருந்தாராம்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில காட்சிகள் நடிகர் வடிவேலுவை வைத்து படமாக்கப்பட்டு இருந்தது. அனால் படிக்காதவன் படத்தில் நடிகர் விவேக் சுமன் காலை பிடித்து அமுக்குவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சியை நடிகர் வடிவேலுவை செய்ய சொன்னதால்  வடிவேலு தமிழ்நாட்டில் நான் எவ்வளவு பெரிய ஆளு நான் அவர் காலை பிடிப்பதா என்று கூறியிருக்கிறார்.

அதன்பிறகு கேரவானுக்கு சென்ற வடிவேலு மறுநாள் படப்பிடிப்பு தளத்திலிருந்து தன்னுடைய நடையை கட்டினார். இயக்குனர் வடிவேலு எங்கே என்று கேட்டதற்கு வடிவேலு இந்த படத்தை நிராகரித்து விட்டு சென்றுவிட்டார் என கூறியுள்ளார்களாம். அதன் பிறகு தான் நடிகர் விவேக் இந்த படத்தில் கமிட் ஆனார்.

என்னதான் விவேக் உடைய இந்த காட்சி படத்திற்கு ஒரு பக்க பலமாக இருந்தாலும் நடிகர் வடிவேலுக்கு அந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தி உள்ளதாம். அது மட்டுமல்லாமல் அந்த உடை, நடை, பாவனை அனைத்தும் அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரம் முதல்கொண்டு எல்லாமே நடிகர் வடிவேலுக்கு கச்சிதமாக பொருந்தியது ஆனால் சுமன் காலை பிடித்து அமுக்கும் காட்சி மட்டும் வடிவேலுக்கு பிடிக்கவில்லை.

இதனால் படிக்காதவன் படத்தை நிராகரித்துவிட்டு வெளியேறினார் நடிகர் வடிவேலு. இந்த தகவலை பிரபல ஊடகப் பெட்டியில் மீசை ராஜேந்திரன்  கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.