சினிமா உலகில் இருக்கும் டாப் நடிகர்கள் பலரும் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து மென்மேலும் சினிமாவில் செல்லவே விரும்புகின்றனர் அந்த வகையில் தளபதி விஜய் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலபடுத்தி கொண்டே செல்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் முதல் முறையாக தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்து தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ரெடியாக இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.
விஜய் பல்வேறு நடிகர் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஒரு சிலர் அவருடன் சேர்ந்து நடிக்கும் போது அது மக்களை மகிழ்விக்கும் அந்தவகையில் விஜய்யும், வடிவேலும் இணைந்து இருக்கும் ஒவ்வொரு படமும் இதுவரை சூப்பர் ஹிட் படம் தான் மேலும் இவர்கள் இருவரும் இணையும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி தான் உள்ளது.
கடைசியாக கூட விஜய்யுடன் வடிவேலு இணைந்து மெர்சல் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அதற்கு முன்பாக இருவரும் பிரண்ட்ஸ், வசீகரா, சச்சின், வில்லு, போக்கிரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “துள்ளாத மனமும் துள்ளும்”.
இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக விஜய் கேரியரில் அமைந்தது ஆனால் உண்மையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் வடிவேலு தான் ஆனால் அப்பொழுது எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன்வராததால் பிறகு வடிவேலுவை தூக்கிவிட்டு ஹீரோவை மாற்றி விஜயை வைத்து எடுக்க முடிவு செய்தாராம் இயக்குனர் எழில் இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.