தமிழ் சினிமா உலகில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் 90 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் வடிவேலு இவரது இடத்தை நிரப்ப இன்று வரை சரியான ஆள் யாருமே இல்லை..
அது அவரால் மட்டுமே முடியும்.. ஒரு வழியாக வடிவேலு 4 வருடங்கள் கழித்து இப்பொழுது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி அசத்தி வருகிறார். முதலாவதாக இயக்குனர் சுராஜ் உடன் கைகோர்த்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடித்து இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் சந்திரமுகி 2 படத்திலும் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. இதனால் சினிமா உலகில் மீண்டும் வெற்றியை ருசிக்க ரெடியாக இருக்கிறார் இந்த நிலையில் வடிவேலு பற்றி செய்து கொண்டு இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் ஒரு நடிகர் இருந்தால் அவரைத் தொடர்ந்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் சினிமா உலகில் நுழைவது வழக்கம்.. அப்படி வடிவேலுவை அது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சினிமா உலகில் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் யாருமே வரவில்லை ஆனால் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் வடிவேலுவின் தம்பி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வடிவேலுக்கு மொத்தம் மூன்று தம்பிகள் இரண்டு தங்கைகள் இருக்கின்றனர் அதில் ஒரு தம்பி ஜெகதீஸ்வரன் இவர் சினிமா உலகில் ஒரு படம் நடித்துள்ளார் அதுவும் சிம்பு படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார் அந்த படம் வேறு எதுவும் அல்ல.. காதல் அழிவதில்லை திரைப்படத்தில வடிவேலு தம்பி ஒரே சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.