80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் சினிமா உலகில் வெற்றியை மட்டுமே சம்பாதித்தவர் என்றால் அது வடிவேலு தான். படங்களில் இவரது கதாபாத்திரம் தனித்து பேசப்படும் அளவிற்கு படங்களில் நடிக்க கூடியவர் இவர் காமெடியனாக மட்டும் நடிக்காமல் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஹீரோவாகவும் நடித்து அசத்தியவர்.
சில பிரச்சினை காரணமாக கடந்த நான்கு வருடங்கள் சினிமாவில் தென்படாமல் இருந்த இவர் பிரச்சினைகளை எல்லாம் முடித்துவிட்டு தற்போது சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறார். அதில் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைபடத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதால் இதில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இன்று வடிவேலு பிறந்த நாளை முன்னிட்டு மாமன்னன் பட ஹீரோ உதயநிதி ஸ்டாலின்..
படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் ஏற்பாடு செய்து வடிவேலுக்கு பிறந்தநாள் அதிர்ச்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வடிவேல் பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார் இப்போது அவர் சொன்னது, மாமன்னன் படத்தில் கேக் வெட்டி இப்போதுதான் கொண்டாடினேன் மாரி செல்வராஜ் உடன் படப்பிடிப்பில் உள்ளேன் மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குனர்.
வாழ்வியலை அப்படியே படமாக்கி வருகிறார் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என கூறினார் மேலும் பேசிய அவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறோம் விரைவில் அறிவிப்பு வரும் என கூறியுள்ளார் வடிவேலு.