vadivelu speak about bavatharani passed away : பவதாரணியின் மறைவு குறித்து வடிவேலு உருக்கமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
இளையராஜாவின் ஆசை மகளும் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியுமான பின்னணி பாடகி பவதாரணி உடல் நலக்குறைவால் நேற்று ஜனவரி 25ஆம் தேதி காலமானார். இவர் புற்றுநோயால் கடந்த ஐந்து மாதங்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
ஆனால் ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் திடீரென காலமானார் நேற்று மாலை 5:20 மணிக்கு இவரின் மரணம் நிகழ்ந்துள்ளது பவதாரணிக்கு தற்பொழுது வயது 47 சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடி பிரபலம் அடைந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பவதாரணி மறைவு குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு உருக்கமாக பேசியுள்ளார் அவர் கூறியதாவது அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்கமகள் செல்லப்பிள்ளை பவதாரணி காலமானார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கு என் குடும்பத்தாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
தெய்வக் குழந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது என கேட்டதும் என் இதயம் நொறுங்கி விட்டது சாதாரண குழந்தை அல்ல பவதாரணி குயிலோட குரல் அவருடையது ஒரு தெய்வீக குழந்தை கள்ள கபடம் இல்லாத பிள்ளை திடீரென மறைந்தது உலக தமிழர்கள் அனைவரும் நொறுங்கி இருப்பார்கள்.
அண்ணன் இளையராஜா மற்றும் அவரது குடும்பங்கள் தாங்கிக் கொள்ள முடியாத துயரம் தான் இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தைப்பூச தினத்தில் பவதாரணி மறைந்துள்ளது தான் அவரின் ஆன்மா முருகனின் பாதங்களை சரணடையட்டும் தங்க மகள் பவதாரணி ஆன்மா சாந்தி அடையட்டும் என தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மரணம் அடைந்தார் ஆனால் அவர் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வடிவேலு வெளியிடவில்லை. என்னதான் பகையாக இருந்தாலும் சினிமாவில் வடிவேலுவை தூக்கி விட்டவர் விஜயகாந்த் ஆனாலும் வடிவேலு நன்றி இல்லாமல் இப்படி நடந்து கொண்டது மிகப்பெரிய வருத்தத்துக்குரிய செய்தி தான் ஆனாலும் இளையராஜாவின் மகளுக்கு இரங்கலை தெரிவித்துள்ளது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காதது ரசிகர்களுக்கு இன்னும் கோபம் தனியாமல் இருந்து வருகிறது.