தனது பாணியில் வடிவேலு பாடியுள்ள நாய் சேகர் படத்தின் டீசென்டான ஆளு பாடல் வெளியானது.!

naai-sekar-returns
naai-sekar-returns

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வந்த காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் 23ஆம் புலிகேசி படத்தின் பிறகு ஒருசில பிரச்சனையின் காரணமாக நடிகர் வைகைப்புயல் வடிவேலுவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நிலையில் வடிவேலு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதன் பிறகு அந்த பிரச்சினை எல்லாம் சுமுகமாக முடித்துவிட்டு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் மறுபடியும் ரீ என்றி கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு. இதனை தொடர்ந்து வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் மற்றும் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர் மத்தி நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.

அதனை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அது மட்டும் அல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலிருந்து அப்டேடுகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலிருந்து தற்போது மூன்றாவது பாடல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. டீசன்ட் ஆனா ஆளு என தொடங்கும் இந்த பாடலை வைகை புயல் வடிவேலு அவர்கள் சொந்த குரலில் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் வடிவேலு பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இதோ வைகைப்புயல் வடிவேலு பாடிய டிசென்ட்டான ஆளு பாடல்…