Vadivelu salary high : தமிழ் சினிமா இன்று கொண்டாடும் நடிகர் வடிவேலு. இவர் கவுண்டமணி செந்தில் இருக்கும்பொழுதே திரைக்க வந்தவர் முதலில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்து பிரபலமடைந்தார் அதன் பிறகு நல்ல நல்ல படங்களை நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து.
தன்னை வளர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் தொடர்ந்து காமெடியனாக ஜொலித்த இவர் ஹீரோவாகவும் வெற்றி கண்டார் அந்த வகையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இப்படி காமெடியன்னாகவும், ஹீரோவாகவும் மாறி மாறி நடித்து வருகிறார் கடைசியாக கூட இளம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக நடித்தார். இதுவரை பார்த்திராத வடிவேலுவை இந்த படத்தில் பார்க்க முடிந்தது.
இந்த படத்தில் தேவையில்லாமல் பேசுவது, காமெடி பண்ணுவது, எனக்கு எதுவுமே கிடையாது கொடுக்கப்பட்டார். கொடுக்கப்பட்ட ரோலில் காணக்சிதமாக நடித்து கைதட்டல் வாங்கினார் இவரது நடிப்பை பார்க்கவே பலரும் மாமன்னன் படத்தை போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர். படம் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.
இந்தப் படத்திற்கு பிறகு வடிவேலுவை பலரும் புக் பண்ணி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் வடிவேலு தனது மார்கெட் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளதை உணர்ந்து கொண்டு தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். வடிவேலு தற்பொழுது ஒரு படத்திற்கு 5 கோடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.