தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடியில் முன்னணி காமெடியனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு, கவுண்டமணி செந்திலுக்கு பிறகு வடிவேலு தான் என்ற நிலைமை இருந்தது ஒரு காலம் ஆனால் சமீபகாலமாக இவர் சினிமாவில் நடிக்க முடியாமல் இருக்கிறார்.
23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ஆனால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுக்கு ரெட் கார்டு போடப்பட்டது அதனால் எந்த ஒரு படத்திலும் வடிவேலு நடிக்க முடியவில்லை, இந்த நிலையில் இவரை எப்படியாவது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என பலரும் முயற்சித்து வருகிறார்கள். ஏனென்றால் வடிவேலு காமெடியில் பல மக்களை மூழ்கடித்துள்ளார்.
இந்த நிலையில் இளம் இயக்குனர் ஒருவர் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் வெப் சீரியஸ் ஒன்றை இயக்குவதற்காக தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வடிவேலுவை அணுகியுள்ளார், ஆனால் வடிவேலு 8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரியஸ் தொடருக்கு நாலு கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளார். ஒவ்வொரு எபிசோட்டிற்க்கும் 50 லட்சம் சம்பளம் வேண்டும் என கூறியுள்ளார்.
வடிவேலுவின் இந்த சம்பள விஷயத்தைக் கேட்ட தயாரிப்பு நிறுவனம் கிறுகிறுத்துப் போய் தலைசுற்றி நின்றுவிட்டது, போதுமடா சாமி ஆளை விடுங்க என வெப்சீரிஸ் தொடரை தயாரிக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.