தமிழ்சினிமாவில் அனைத்து ரசிகர்களும் விரும்பப்பட்ட ஒரு நடிகர் என்றால் அது வைகைபுயல் வடிவேலு தான், காமெடி நடிகர் வடிவேலுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான திரைப்படம் அமையவில்லை என கூறப்படுகிறது, 2006 ஆம் ஆண்டு அவர் ஹீரோவாக நடித்த 23ம் புலிகேசி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதனைத்தொடர்ந்து 24ம் புலிகேசி திரைப்படத்தில் நடித்தார் ஆனால் திரைப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஃபார்முக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.
வைகைப்புயல் வடிவேலு 2017 ஆம் ஆண்டு விஜயின் மெர்சல் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் சிவலிங்கா ஆகிய படங்களிலும் நடித்திருந்தார், இந்த நிலையில் மீண்டும் வடிவேலு மூன்று வருடம் கழித்து தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார். கமலஹாசனின் தலைவன் இருக்கிறான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருக்கிறார்.
இந்த தகவல் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார், இப்படி இருக்கும் நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் சுராஜ் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் வடிவேலு கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, இயக்குனர் சுராஜ் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், இதற்குமுன் சுராஜ் இயக்கத்தில் மிகவும் பிரபலமான இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் வடிவேலு. ஆம் தலைநகரம் திரைப்படத்தில் நாயகிகளாகவும் மருதமலை திரைப்படத்தில் என்கவுண்டர் ஏகாம்பரம் ஆகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த இரண்டு கதாபாத்திரமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதுமட்டும் இல்லாமல் வடிவேலு சினிமா பயணத்தில் மிகமுக்கிய திரைப்படமாக அமைந்தது, இந்த நிலையில் மீண்டும் இது போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த ஊரடங்கும் முடிந்ததும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.