தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்து கொண்டு பல வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இப்பொழுது கூட சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் போன்ற படங்கள் கைவசம் தனுஷுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் மீண்டும் ஒருமுறை கைகொடுத்து வடசென்னை இரண்டாவது பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் கூட திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் கூட வெற்றிமாறன் நாங்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை இணைய உள்ளோம் என்பதை வெளிப்படையாக அவரே கூறிவிட்டார்.
இதனால் ரசிகர்கள் தற்பொழுது சந்தோஷத்தில் இருக்கின்றனர். நடிகர் தனுஷ் சினிமா உலகில் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி படங்களை தயாரிப்பது, பாடுவது என தனது திறமையை வளர்த்துக் கொண்டே இருக்கிறார். இதனால் சினிமா உலகில் தனுசுக்கான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால் ஒரு சில நடிகர்கள் தனுஷை அசிங்கப்படுத்தியும் உள்ளனர். அந்த லிஸ்டில் நடிகர் வடிவேலுவும் இருக்கிறார் வடிவேலுவும் தனுஷும் இணைந்து ஒரு படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது நடிகர் வடிவேலு ஒரு சீனுக்கு நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் அந்த சீன் சரியாக வராததால் ஏழு எட்டு டேக்குகள் தாண்டியதாம்.
ஒரு கட்டத்தில் அந்த படத்தின் இயக்குனர் சீக்கிரம் காட்சிகளை எடுங்கள் நேரமாகிக் கொண்டே போனால் வடிவேலு சாருக்கு சம்பளம் அதிகமாகி கொண்டே இருக்கும் என கூறினார். இதனால் வடிவேலு கோபப்பட்டாராம் பின் ஒரு வழியாக சமாதானப்படுத்தி காட்சிகளை எடுக்க சொன்னார்களாம். ஆனால் அப்பொழுதும் அதிக டேக்குகள் வடிவேலு எடுத்ததால் ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷ் வடிவேலு அண்ணா இயக்குனர் சொல்றதை கேட்டு நடிங்கள் என கூறியுள்ளார்.
உடனே நடிகர் தனுஷை பார்த்து கோபமடைந்தாராம். அங்கு இருந்தவர்கள் எல்லோருக்கும் சற்று வருத்தமாக போய்விட்டதாம். என்னதான் ஒரு முன்னணி நடிகராக வடிவேலு இருந்தாலும் அந்த படத்தின் ஹீரோவை அப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபத்துடன் பார்த்தது தனுஷுக்கு ஒரு அசிங்கமாக போனதாக பேட்டி ஒன்றில் மீசை ராஜேந்திரன் வெளிப்படையாக கூறியுள்ளார்.