வடிவேலுக்கா இந்த நல்ல மனசு.! அவரின் மருமகள் யார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

vadivel

தமிழ் சினிமாவுலகில் கவுண்டமணி செந்தில் ஆகிய 2 பேருக்கும் அடுத்ததாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு இவர் பல ஆண்டுகளாக காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவர் காமெடியனாக நடிப்பது மட்டுமல்லாமல் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக வலம் வந்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று பட்டி தொட்டி எங்கும் விளங்கினார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த எலி,தெனாலிராமன் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இவர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் ஆனால் அதில் நடந்த நிகழ்வுகளால் வடிவேலு மிகவும் மனம் நொந்து போனார் என்று தான் கூற வேண்டும். ஆனால் அப்போது திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வெற்றி பெற்றதால் தொடர்ந்து வடிவேலுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் அவர் சினிமாவை விட்டு விலக வேண்டிய நிலைமை வந்துவிட்டது.

இதனையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவை தமிழ் திரைப்படங்களில் நடிக்க தட உத்தரவிட்டது அவரை யாரும் எந்த படத்திலும் நடிக்க கூப்பிடவில்லை இதனால் வடிவேலு சமூக வலைதள பக்கங்களில் பேசப்பட்டு வரும் ஒரு நபராகவே இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சமிபத்தில் நண்பர்கள் நடத்திய கெட் டு கேதர் நிகழ்ச்சியில் இவர் உள்ளத்தில் சிறந்த உள்ளம் என்ற பாடலை பாடி அனைவர் மனதிலும் இடம் பிடித்திருந்தார்.

மேலும் வடிவேலின் மகன்தான் சுப்பிரமணி இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வடிவேலு திருமணம் செய்து வைத்திருந்தார் சுப்ரமணிக்கு பார்க்கப்பட்ட பெண் பெயர் புவனேஸ்வரி.

புவனேஸ்வரி குடும்பம் ஒரு ஏழைக் குடும்பம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊரை சேர்ந்தவர்.புவனேஸ்வரியின் அப்பா ஒரு மர வேலை செய்யும் சாதாரண கூலி தொழிலாளி என்றுதான் கூறவேண்டும் குடிசை வீட்டில் இருந்த புவனேஸ்வரியை தன் மகனுக்கு வடிவேலு திருமணம் செய்து வைத்தார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது வடிவேலு ஒரு நல்ல மனிதன் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் பழையதை வடிவேலு எப்போதுமே மறக்க மாட்டார் என்று கூறி வருகிறார்கள்.

vadivel