சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒருவர் பிரபலமாக இருப்பார்கள் அந்த வகையில் காமெடியில் நாகேஷ், கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்து காமெடியில் மிகப் பிரபலமாக இருப்பவர் வடிவேலு இவர் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இன்று வரை உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய்..
விக்ரம், சூர்யா போன்ற நடிகரின் படங்களில் காமெடியன்னாக நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் 23ஆம் புலிகேசி, தெனாலி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து நான்கு வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஒரு வழியாக லைகா நிறுவனம் அந்த பிரச்சினையில் இருந்து அவரை மீட்டு எடுத்தது அதன் பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் படம் வெளிவந்து சுமாரான வெற்றியை பதிவு செய்தது அதனை தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
முதலாவதாக மாமன்னன் திரைப்படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த படத்தில் வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என பலரும் சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலு நிஜ வாழ்க்கை குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது வடிவேலு மதுரைக்கு செல்லும் போது தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செல்ல மாட்டாராம்.
வடிவேலு எப்பொழுதும் சில நண்பர்களுடன் தனி விமானத்தின் மூலம் தான் செல்வார் என சினிமா பிரபலம் வருவார் தெரிவித்துள்ளார் மேலும் இதற்கு காரணம் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஜாலியாக செல்வதற்காக மனைவியுடன் செல்ல மறுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.