வடிவேலுவை தொடர்ந்து மேலும் ஒரு காமெடி நடிகருக்கு வரும் அடுத்த ஆப்பு.! இவருக்கு தான் அடுத்த ரெட்கார்ட்…

vadivelu
vadivelu

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு இவர் எப்படி படங்களில் நடித்து கொண்டிருக்கும் பல சிக்கல்களை செய்வாரோ அதேபோல பிரபல காமெடி நடிகர் ஒருவர் செய்து உள்ளார் இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அதாவது பின்னணி நடன கலைஞராக இருந்து தற்போது காமெடி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் அதன் பிறகு டாக்டர், பீஸ்ட், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தற்போது தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமாவில் படிபடியாக உயர்ந்து வரும் நேரத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி அவர்கள் ஒரு மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார் அதாவது ஒரு திரைப்படத்திற்காக 10 நாட்கள் கால் சீட் ஒதுக்கிருக்கிறார் ஆனால் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு சென்று இருக்கிறார் இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் அடைந்து இருப்பதாக புகார் அளித்திருக்கிறார்.

அதாவது ரெட்டின் கிங்ஸிலி அவர்கள் தன்னுடைய படத்திற்காக பத்து நாட்கள் கால் சீட்டு ஒதுக்கி இருக்கிறார் ஆனால் ஐந்து நாட்கள் மட்டும் தான் நடித்துக் கொடுத்திருக்கிறார் இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை தரவேண்டும் என்றும் நஷ்ட ஈடு கொடுக்கும் வரையில் அவர் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்றும் புகார் கொடுத்திருக்கிறார்.

இதேபோல் பிரச்சனையில் சிக்கித்தான் நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். தற்போது அதே பிரச்சனையில் ரெடின் கிங்ஸ்லியும் மாட்டிகொண்டார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் இதனால் நடிகர் ரெடின் கிங்க்ஸ்லிக்கு படவாய்ப்புகள் குறையவும் வாய்ப்புள்ளதாக கூறபடுகிறது.