எனக்கு போட்டியா நடிக்க வருவியா.. நடிக்க வருவியா.. வடிவேலுவை நெஞ்சிலேயே மிதித்த பிரபல நடிகர் – அதனால் தான் இப்ப இவ்வளவு ஆட்டமா

vadivelu
vadivelu

80 களிலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்து புகழ்பெற்றவர் வைகைப்புயல் வடிவேலு இப்படிப்பட்ட நடிகரை ஒரு பிரபலம்  நெஞ்சிலே மிதித்திருக்கிறார் என சிசர் மனோகர் தெரிவித்தார். ராஜ்கிரண் படத்தின் மூலம் அறிமுகமானவர் வடிவேலு.

அதன் பிறகு காமெடி திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு ரஜினி, விஜயகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா டாப் நடிகரின் படங்களில் காமெடியன்னாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்து வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் 23 ஆம் புலிகேசி, தெனாலி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் போன்ற படங்கள் வெற்றியை தந்தார்.

அடுத்ததாக இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் போது தயாரிப்பாளருக்கும், வடிவேலுக்கும் இடையே பிரச்சனை வர வடிவேலுக்கு ரெக் கார்டு கொடுக்கப்பட்டது இதனால் நான்கு வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு வந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். அந்த படம் மோசமான விமர்சனம் பெற்றதைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில்  வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர் சிசர் மனோகர் சமீபத்திய பேட்டி ஒன்று வடிவேலு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி கொடுத்தது நான் தான் ராஜ்கிரன் கம்பெனியில் நான் புரோடக்ஷன்  மேனேஜராக இருந்தபோது வடிவேலு என்னிடம் 30 நாட்கள் வேலை பார்த்தார்.

அப்பொழுது நடிக்க ஆசைப்பட்ட  அவருக்கு “என் ராசாவின் மனசிலே” படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க நான் தான் வாய்ப்பு கொடுத்தேன்.. அப்பொழுது வடிவேலு ஒரு சீனில் சிறப்பாக நடித்து  கைதட்டல் வாங்கினார். அங்கு வந்த கவுண்டமணி நம்மளை விட காமெடி ஆர்டிஸ்ட் யாராவது வந்திருக்காங்களா என கேட்டார் அப்போ நான் தான் அவரிடம் வடிவேலு நம்ம கிட்ட வேலை பார்த்த பையன் தான் மதுரைக்காரன் இந்த சீன் முடிஞ்சதும் அடுத்த சீன் நீங்க அவனை மிதிக்கிற சீன் எடுக்க போறாங்கன்னு சொன்னேன்..

இதைக் கேட்டு டென்ஷனான கவுண்டமணி அவன் அவன் தேனாம்பேட்டையில் இருந்து வந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் காத்துகிட்டு இருக்கான் நீ என்ன மதுரையில் இருந்து ஆள கூட்டிட்டு வந்து நடிக்க  வைத்தியா ராஜ்கிரனிடம் கேட்டார் உடனே ராஜ்கிரண் உங்ககிட்ட அடிவாங்குற ஒரு சீன்தான் நடிப்பானு சொன்னார். இதை எடுத்து அந்த சீன் எடுக்கும் போது கவுண்டமணி, வடிவேலு நெஞ்சில் உண்மையாலுமே மிதிச்சாரு..

நடிக்க வருவியா நடிக்க வருவியா என்று சொல்லி மதித்தார் அந்த சீன் முடிஞ்சதும். என்கிட்ட வந்து அண்ணன் நெஞ்சில மிதிச்சிட்டாருன்னு சொன்னான். விடு நீ பெரிய ஆள் ஆகிடுவேன் நான் சொன்னேன் அப்படி அவனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து எனக்கு நானே ஆப்பு வைத்துக் கொண்டேன் வடிவேலு நிறைய படத்துல இருந்து என்னை தூக்கி இருக்காங்க.. அதுக்கப்புறம் வடிவேலு இருக்குற பக்கமே நான் போகல என கூறினார்.