சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகளை பற்றி கூட நாம் தினமும் பேசிக் கொண்டிருக்க மாட்டோம் ஆனால் காமெடிக்கு பேர்போன நடிகர் வடிவேலு பற்றி யாராவது ஒருவர் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர் அந்த அளவிற்கு தனது அசாதாரணமான காமெடியை கொடுத்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் நடிகர் வடிவேலு இருந்தால்தான் அந்த படம் எடுக்க முடியும் என்ற நிலைமை எல்லாம் இருந்தது அந்த அளவிற்கு பல டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் படங்கள் வரை அனைத்துமே வடிவேலு காமெடியில் பின்னி பெடல் எடுத்து இருந்தார். இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் காமெடி நடிகர் என்பதையும் தாண்டி ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார் அதிலேயும் வசூல் வேட்டை நடத்தியதால் வடிவேலு தொடமுடியாத உச்சத்தை தமிழ் சினிமாவில் எட்டினார்.
உச்சத்தில் இருந்த வடிவேலு மீது யார் கண்ணு பட்டதோ என்னவோ உச்சத்தில் இருந்த வடிவேலு திடீரென அதலபாதாளத்திற்கு சென்றாராம் காரணம் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்க இருந்தது அதில் சில பிரச்சனைகள் எழுந்ததால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு இனி தமிழ் படங்களில் நடிக்கக்கூடாது என மிகப்பெரிய ஒரு செய்தியை சொல்ல அவருக்கு வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்காமல் போனது.
பல வருடங்கள் கழித்து தற்போது அந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அந்த காரணத்தினால் வடிவேலு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். முதலில் சுராஜ் இயக்கத்தில் “நாய் சேகர்” என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது இதற்காக வடிவேலு கமிட்டாகியுள்ளார் இந்த திரைப்படத்திற்கான பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது அதில் திமுக ஆட்சி மற்றும் விவேக் போன்றவர்களைப் பற்றி பேசினார் அதன்பிறகு தொடர்ந்து அடுத்ததாக நான் யார் யாருடன் கைகோர்க்க போகிறேன் என்பதையும் வடிவேலு குறிப்பிட்டு பேசினார்.
அந்தவகையில் சுராஜ் உடன் அந்த திரைப்படத்தை முடிந்ததை தொடர்ந்து அடுத்ததாக ராகவா லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2, ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு புதிய திரைப்படம் அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து வடிவேலு ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.