தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் வடிவேலு இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சின்னக்கவுண்டர், சிங்காரவேலன் ,தேவர்மகன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் செந்தில் கவுண்டமணி பிரபல நடிகராக இருந்த பொழுது அவர்களை பின்னுக்குத் தள்ளியவர் என்று கூட சொல்லலாம். அந்தவகையில் வடிவேலுவை தன்னுடைய திரைப்படத்தில் காமெடி நடிகராக நடிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் பல இயக்குனர்கள் தங்களுடைய திரைப்பட படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார்கள்.
அந்த வகையில் நடிகர் வடிவேலு பிரபலமாக இருக்கும் பொழுது பல்வேறு நடிகைகளை சினிமாவிற்குள் நுழைந்துள்ளார் அந்த வகையில் நடிகை சோபாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது வடிவேலுதான் இவர் வடிவேலுடன் சில்லுனு ஒரு காதல் சுறா போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்திருப்பார்.
அதேபோல சந்திரமுகி திரைப்படத்தில் ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகையை நடிகர் வடிவேலு தான் சிபாரிசு செய்தாராம் இவர் பல திரைப்படங்களில் தமிழில் நடித்திருந்தாலும் சந்திரமுகி திரைப்படம் தான் இவரை பெருமளவு பிரபலப்படுத்தியது.
மேலும் தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் சோனா. இவரை ரஜினி நடித்த குசேலன் என்ற திரைப்படத்தில் நடிக்க வைக்க சிபாரிசு செய்தது வடிவேலு தான். மட்டுமில்லாமல் முன்னணி நடிகைகளை கூட நடிகர் வடிவேலு அதில் நடிக்க சிபாரிசு செய்துள்ளார்.
அந்த வகையில் மீனா அம்பிகா போன்ற நடிகைகளை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.