திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த் இவர் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்ததுடன் மட்டுமல்லாமல் திரை உலகில் பல நல்லதுகளை செய்துள்ளார் மேலும் தன்னை நம்பி வரும் இல்லாதவர்களுக்கு காசை அள்ளிக் கொடுத்தவர் சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர் என பல நன்மைகளை செய்தவர் விஜயகாந்த்.
அதேபோல பல நடிகர்களை வளர்த்து விட்டுள்ளார் இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு வடிவேலு உடன் ஒரு தடவை சண்டை வந்தது. பிறகு விஜயகாந்த் உடன் யார் யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் வடிவேலு வாய்ப்பு தர மறுத்தார் மேலும் பிரச்சனையும் பண்ண ஆரம்பித்தார்.
அப்படித்தான் ஒரு தடவை விஜயகாந்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த மீசை ராஜேந்திரனை ஏவிஎம் தியேட்டரில் இருந்து பார்த்த வடிவேல் கூப்பிட்டு நாளை ஒரு படப்பிடிப்பு இருக்கிறது. நீங்கள் வந்து விடுங்கள் என வடிவேலு கூறிவிட்டாராம். மீசை ராஜேந்திரனும் அதே போல 7 மணிக்கு மேக்கப் உடன் அங்கு சென்று காத்திருந்தார் சூட்டிங்கில் ஒரு காட்சியில் வடிவேலும் மற்றும் பெசன்ட் நகர் ரவியும் நடித்துக் கொண்டிருந்தார்களாம்.
அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் நடிகர் மீசை ராஜேந்திரனிடன் வந்து அண்ணா நீங்க நடிக்க வேண்டிய ரோலில் தான் ரவி அண்ணன் நடிச்சிக்கிட்டு இருக்காரு வடிவேலு கிட்ட போய் என்னன்னு கேளுங்க என்று சொன்னவுடன் வடிவேலுவை சந்திக்க சென்றார்.. ஒரு சேரில் காலை நீட்டி போட்டு கொண்டு மறு சேரில் வடிவேலு சாய்ந்து இருந்தாராம் ராஜேந்திரன் சென்றவுடன் அண்ணா நீங்கள் அழைத்தீர்களே என்று கேட்க..
விஜயகாந்த் கூட இருக்கிறவனுக்கு வாய்ப்பு தர மாட்டேன் என வடிவேலு கூறினார். அவர் சீனியர் நடிகர் என்பதால் மீசை ராஜேந்திரன் என்னிடம் செய்ததோடு இருக்கட்டும் சார் தயவுசெய்து இன்னொரு நடிகரை இப்படி வாய்ப்பு கொடுக்கிறேன் என்று அழைத்து அவமானப்படுத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டதாக மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.