Vadivelu has released an awesome video: கொரோனா உலக மக்களையே மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவிலும் அதிகரித்து உள்ளது. அதன் தாக்கத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 3 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா பற்றிய விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுபோல சினிமா பிரபலங்கள் பலரும் அதனை பாட்டு பாடி மற்றும் அறிவுறுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வெளியே வந்து செல்லும் நிலைமை உருவாகி உள்ளது. ஆனால் மக்கள் அதனை மட்டும் சரியாக பயன்படுத்தாமல் வேறு சில காரணங்களுக்காக வெளியில் சுற்றித் திரிந்து வருகிறார்கள். நோய்க்கான எதிர்வினையாற்றும் மருந்தை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் வெளியே சுற்றித் திரிவது நம் உயிருக்கு ஆபத்து என்பதை உணராமல் மக்கள் அலை மோதி வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தடுப்பதற்காக போலீசார், துப்புரவு பணியாளர், மருத்துவர்கள் இவர்களெல்லாம் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து வருகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இசைகள் மூலம் விழிப்புணர்வை வெளிப்படுத்தி வரும் வைகை புயல் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டு காவல்துறையினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியது என்னமோ நடக்குது இங்க கடவுள் இறங்கிவிட்டான் கடவுள் எல்லோரையும் சோதிக்கின்றான் இந்த சோதனையில் அனைவரும் பாஸ் ஆகி விட வேண்டும் போலீசார் வேண்டும் என்று எல்லோரையும் அடிக்கவில்லை அடித்தால்தான் மக்கள் கேட்பார்கள் என்று தான் அடிக்கிறார்கள் என கூறியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு.
இதோ அந்த வீடியோ .
காவல்துறைக்கு ஆதரவளிப்போம் pic.twitter.com/yz5NUP71yI
— Actor Vadivelu (@VadiveluOffl) April 27, 2020