இந்த மொக்கை கதையில் நடித்து மட்டமாக மாறிவிட்டார் வடிவேலு.. கிழி கிழின்னு கிழித்த பிரபல நடிகர்.

vadivel
vadivel4

80,90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களிலும் சோலோவாகவும் நடித்து மக்களை மகிழ்வித்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. முதலில் ராஜ்கிரன் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு செந்தில் கவுண்டமணி போன்ற டாப் காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்த நாட்களில் தனது முழு திறமையும் வெளிப்படுத்தி முழு காமெடியனாக மாறி ஜொலித்தார். குறிப்பாக இவர் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோகளின் படங்களில் நடித்து வெற்றியை மட்டுமே கண்டார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென சோலோவாக படங்களில் நடித்தார் அப்படி இவர் நடித்த இம்சை அரசன், 23ஆம் புலிகேசி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் அதன் இரண்டாவது பாகத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளரும் இயக்குனருமான ஷங்கர் தயாரித்தார். ஆனால் வடிவேலுவுக்கும் ஷங்கருக்கும் இடையே அப்பொழுது பிரச்சனை ஏற்பட பிறகு அந்த படம் டிராப்பானது

மேலும் இனி சினிமாவில் வடிவேலு நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கம் கூறியது இதனால் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்  இனி அவ்வளவுதான் அவர் வாழ்க்கை என நினைத்த போது லைகா நிறுவனம் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்தது. அதன் பிறகு சுராஜ் உடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் படும் பிஸியாக நடித்து வருகிறார்

இப்படி இருக்கின்ற நிலையில்  இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து தன்னுடன் பழகிய நடிகர் நடிகைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் வைகை புயல் வடிவேலு குறித்தும் பேசி உள்ளார். வடிவேலு சினிமாவில் ஒரு கட்டத்தில் நகைச்சுவையால் ஒட்டுமொத்த மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இருந்தும் நடிக்க முடியாமல் சில காலங்கள் பயணித்தார்

அப்பொழுது கூட இவருடைய காமெடிகளை மீம் கிரியேட்டர்கள் பெரிய அளவில் பயன்படுத்தி அவரை பிரபலப்படுத்தினர். பிரச்சனைகளை எல்லாம் தகர்த்து வெளிவந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு சரிவை கொடுத்தது. நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு அவர் மக்காகி விட்டார். நானும் வடிவேலுவிடம் ஒரு கதையை கூறி இருக்கிறேன். அந்த கதை முழுக்க முழுக்க பாட்டி பேரனுக்கும் இடையே நடக்கும் ஒரு நகைச்சுவையான கதை. சம்பள பிரச்சனை காரணமாக வடிவேலு இந்த படத்தில் நடிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.