80, 90 காலகட்டங்களில் இருந்த பல முக்கிய நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் வடிவேலு. காமெடி என்றாலே மக்கள் பலருக்கும் மனதில் வருவது வடிவேலு. மேலும் இவர் தமிழில் இருபத்தி மூன்றாம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் போன்ற ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி இருந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் நடிகராகவும் காமெடியாகவும் வலம்வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் சில பிரச்சனைகளால் படங்களில் நடிக்க முடியாமல் இருந்தார். ஒருவழியாக அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து சில மாதங்களுக்கு முன்புதான் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அப்படி முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரை படத்தில் ஹீரோவாக வடிவேலு நடித்து வருகிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வடிவேலுடன் தற்போது வளர்ந்து வரும் காமெடியன்களில் ஒருவரான ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். இவர் தற்போது நாய் சேகர் திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பு தளத்திற்கு வர இரண்டு மணி நேரம் லேட் ஆகி விட்டதால் கோபப்பட்டு வடிவேலு படப்பிடிப்பு சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு சென்று விட்டாராம். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்த ரெடின் கிங்ஸ்லியின் வளர்ச்சி பிடிக்காததால் வடிவேலு இப்படி வெளிப்படுத்துகிறார் எனவும் சிலர் பேசி வருகின்றனர்.