90 காலகட்டத்திலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் காமெடியனாக நடித்து வெற்றிகளை குவித்தவர் நடிகர் வைகை புயல் வடிவேலு. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா விக்ரம் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.
சினிமா உலகில் காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இருப்பினும் சில சர்ச்சைகளில் சிக்கி 4 வருடங்கள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் போனார். தற்பொழுது மீண்டு வந்துள்ள அவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஹீரோவாகவும் காமெடியனாக நடிக்க தொடங்கி உள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர் முதலாவதாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இவர் ஹீரோவாக படங்களில் நடித்து வந்தார்.
அப்பொழுது மார்க்கெட்டை இன்னும் அதிகரித்துக் கொள்ள டாப் நடிகைகள் அதாவது ரஜினி விஜய் அஜித் நடிகர்களுடன் நடித்தால் தனது மார்க்கெட் உயரும் என கருத்தில் கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் வேண்டும் என அடம் பிடித்து உள்ளார்.

அதுவும் தனது ஒரு பாடலுக்காக மட்டுமே அந்த நடிகையை கேட்டுள்ளார். அந்த நடிகை வேறுயாருமல்ல ஸ்ரேயா சரண். இந்த நடிகைக்கு ஒரு பாடலுக்கு ஆட மட்டுமே சுமார் பல கோடி கொடுத்து அவரை படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.