ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு காமெடி நடிகர் யார் என்றால் முதலில் நினைவில் வருவது வடிவேலுதான். இருப்பினும் இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் தற்போது அந்த ரெக்கார்டு நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். அந்த வகையில் முதலாவதாக சுராஜ்யுடன் கைகோர்த்து நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருந்தார்.
ஆனால் எடுத்தவுடனேயே மரண அடியைக் கொடுத்தது படத்தின் தலைப்பு ஏனென்றால் ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது நாய் சேகர் என்ற தலைப்பை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறது. இதில் காமெடி நடிகர் சதிஷ் நடிக்கிறார். அதனால் வடிவேலு சுராஜ் இணையும் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்பொழுது ஏஜிஎஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்து விட்டது இப்பொழுது படத்தின் தலைப்பை மாற்ற முடியாது என கூறி பேச்சுவார்த்தைக்கு முற்றுபுள்ளி வைத்தது. இதனையடுத்து வடிவேலு மற்றும் சுராஜ் இணையும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டுமென முடிவு எடுத்துள்ளது. அந்தவகையில் இந்த படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என படக்குழு முடிவு செய்த
வேளையில் இறுதி கட்டமாக நாய் சேகர் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருபவர் வடிவேலு தான். ஏனென்றால் வடிவேலு நாய் சேகர் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். நானும் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் என்று கூறும் வசனம் மற்றும் நானும் ரவுடிதான் என கூறும் வசனங்கள் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
தற்போதும் அவரது அந்த நாய் சேகர் கதாபாத்திரமும் பலருக்கும் பிடித்துப் போய் இருப்பதால் நிச்சயம் படத்தின் பெயரில் சிறு மாற்றங்கள் செய்தால் போதும் என படக்குழு முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற பெயரையே வைக்க இருப்பதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. ஆனால் வெகு விரைவிலேயே இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.