தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களை பொறுத்தவரையிலும் காமெடியில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டு வந்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் இவர் எவ்வளவு வெற்றியை சம்பாதித்தாலும் அதே அவ்வளவு பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும் ஒரு பக்கம் சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வடிவேலு காமெடியனாக நடித்து வந்து இருந்தாலும் படத்தில் ஹீரோவாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வெற்றிக்கனியை ருசிக்க ஆரம்பித்திருந்த நிலையில் தயாரிப்பாளர் ஷங்கருடன் மிகவும் பிரச்சனை ஏற்பட ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை இனி படங்களில் கமிட் செய்யக்கூடாது என அதிரடியாக ஒரு கட்டளையை போட்டார்.
இதனால் தமிழ் சினிமாவில் நான்கு வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு ஒரு வழியாக அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியாகி தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருந்தாலும் நடிகர் வடிவேலு மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன ஏன் அண்மையில் கூட லொல்லு சபா நடிகர் சுவாமிநாதன் வடிவேலு குறித்து பேசிய செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
லொள்ளு சபா சாமிநாதன் ஒருகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நபராக இருந்தார் அப்போதைய காலகட்டத்தில் நடிகர் வடிவேலு ராஜ்கிரண் வீட்டில் வேலை செய்ததாகவும் அப்போது நான் அங்கு போய் வரும்போது வடிவேலு என்னிடம் படத்தில் ஏதாவது நடிக்கும் சான்ஸ் இருந்தால் கூறுங்கள் என அடிக்கடி சொன்னதாகவும் அவர் சொன்னார். அப்படி ஒரு முறை வாய்ப்பு கிடைக்கவே வடிவேலுவை அழைத்துக்கொண்டு படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
ஒரு காட்சியில் இருவரும் நடிக்கும் பொழுது வடிவேலு சுவாமிநாதனிடம் நீங்கள் சரியாக நடிக்கவில்லை நன்றாக நடியுங்கள் என சொல்ல மாறி மாறி இருவரும் சொதப்பி கொண்டே போக ஒரு கட்டத்தில் சாமிநாதன் நான் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என அவரிடம் கூற ஒருவழியாக இயக்குனர் இந்த காட்சி ஓகே என கூறி முடித்து விட்டார் மேலும் இயக்குனர் வடிவேலுவை உங்களுக்கு மட்டும் க்ளோஸ் ஷாட்டுகள் வைத்துள்ளேன் வடிவேலு யாரிடமும் சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.