விஜய்க்கு தனது பாணியில் வாழ்த்துக் கூறிய வடிவேலு.! வைரலாகும் ட்விட்

vadivelu
vadivelu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்(vijay) அதுமட்டுமில்லாமல் வசூல் மன்னனாகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார், சமீபகாலமாக விஜயின் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது, இந்த நிலையில்  விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது ஆனால் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் தன்னுடைய 46 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள், அதனால் ஒரு வாரமாகவே சமூகவலதளத்தில் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது, பல டேக்குகளை கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இன்று பிறந்தநாள் காணும் விஜய்க்கு பல பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது பாணியில் விஜய்க்கு வாழ்த்து கூறி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது ராஜாவின் பார்வையிலே படம் முதல் சமீபத்தில் வந்த மெர்சல் படம் வரை உன்னுடன் பல படங்களில் நடித்துள்ளேன். உன்னுடைய வெற்றி தோல்விகளை உடன் நின்று பார்த்து வருகிறேன். இந்த சினிமா உள்ளவரை உன் பெயர் ஒலிக்கும் அளவிற்கு உச்சம் தொட , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா என கூடியுள்ளார்.