தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களில் காமெடி நடிகர்களுக்கும் அதிக பங்கு உண்டு. அந்தவகையில் நடிகர் வடிவேலு நடித்த காமெடி திரைப்படங்கள் பல உள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிறைய திரைப்படங்களில் தனது தனி திறமையால் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு.இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படங்களை பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.
ஏய்:- சரத்குமார் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி கொண்ட திரைப்படம் ஏய் இத்திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி மற்றும் சத்யராஜ் காமெடிக்கு எல்லையே இல்லை என்று தான் கூற வேண்டும்.
குண்டக்க மண்டக:-பார்த்திபன், ராய் லட்சுமி, வடிவேலு இவர்கள் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் ஹிட்டடித்த படம் தான் குண்டக்க மண்டக இத்திரைப்படத்தில் பார்த்திபனுக்கும் வடிவேலுக்கும் வாய்ச் சவடால் காமெடி அவ்வளவு அருமையாக இருக்கும்.
ஆறு :- சூர்யா நடிப்பில் வெளியான ஒரு அதிரடியான திரைப்படம்தான் ஆறு இத்திரைப்படத்தில் திரிஷா, வடிவேலு இன்னும் பலர் நடித்துள்ளனர் இதில் வடிவேலு சுண்டி மோதிரம் என்ற கதாபாத்திரத்தில் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
வேல்:- நடிகர் சூர்யா இரண்டு வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் அவர்கள் நடித்துள்ளார். திரைப்படத்திலும் வடிவேலு அவர்கள் தனது காமெடி நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தெனாலிராமன்:- முழுக்க முழுக்க காமெடியான திரைப்படம் தான் தெனாலிராமன். திரைப்படத்தில் வடிவேலு அவர்கள் இரண்டு வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார் அதில் ஒரு வேடத்தில் நாட்டின் அரசராகவும் மற்றொரு வேடத்தில் தெனாலிராமன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து இருப்பார்.
எலி: இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் வடிவேலு அடித்திருப்பார் இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடியான திரைப் படமாக அமைந்திருக்கும். இந்த படத்தில் ஆரம்பத்தில் திருட்டுத் தொழில் செய்பவராக நடித்திருப்பார் பின்னர் போக போக காவல் அதிகாரிகளுக்கு உதவியாளராக நடித்திருப்பார்.
முதல்வன்:- இத்திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ள இந்தப் படம் அரசியல் ரீதியான திரைப்படமாகும். இந்த படத்தில் வடிவேலு ஒரு செய்தியாளராக பணியாற்றியிருப்பார். இத்திரைப்படத்தில் இவரது இடுப்பில் குத்தினாள் போடா பன்னி என்ற காமெடி அப்போது மிகவும் வைரலாக பரவியுள்ளது.
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா:-பிரபு,வடிவேலு,எஸ் வி சேகர் நடிப்பில் வெளியாகிய ஒரு காமெடி திரைப்படம் தான் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, இவர்களுக்கு ஜோடியாக கோவை சரளா, ரோஜா, ஊர்வசி இவர்கள் நடித்துள்ளனர்.
பாட்டாளி:- நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பாட்டாளி திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானி அவர்கள் நடித்திருப்பார் இதில் வடிவேலு ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கொள்ளை அடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சந்திரமுகி:- ஒரு திரில்லர் கலந்த திரைப்படம்தான் சந்திரமுகிஇத்திரைப்படத்தில் முன்னணி நடிகரான ரஜினி, பிரபு,இவர்கள் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் பிரபுவுக்கு ஜோடியாக ஜோதிகா அவர்கள் நடித்துள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் இத் திரைப்படத்தில் வடிவேலு அவர்கள் தாது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிப்பூட்டும் விதமாக நடித்திருப்பார்.