தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு நகைச்சுவைகளில் கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகர் வடிவேலு இவர் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலம் மற்றவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது என சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் அரசியல் மேடை ஏறியதால் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பலத்த எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கிற்கு சென்ற ரசிகர்கள் படத்தைப் பார்த்து தன்னை அப்டேட் செய்து கொள்ளவில்லை என்றால் ஃபீல்டில் நிலைக்க முடியாது என நேரடியாக விமர்சனம் வைத்தார்கள்.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாக்கியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் தன்னை பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் வடிவேலு மீது தொடர்ந்து அவருடன் நடித்த சக நடிகர்கள் குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள் இந்த குற்றச்சாட்டு நீண்டு கொண்டே செல்கிறது அந்த வகையில் நடிகர் சிஸ்ஸர் மனோகரன் ஒரு படி மேலே சென்று வடிவேலுவை வெட்டலாம் என்று தோன்றியது எனக் கூறியுள்ளார். சீமானால் தப்பினார் எனவும் கூறினார் அதேபோல் கொட்டாச்சி மீசை ராஜேந்திரனும் வடிவேலு மீது பெரும் குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.
சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்த பவா லட்சுமணன்கூட வடிவேலு தங்களை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகரை வடிவேலு அடித்த சம்பவம் தற்பொழுது தெரியவந்துள்ளது அதாவது சரத்குமார், லைலா, வடிவேலு ஆகியோர்கள் நடித்த திரைப்படம் கம்பீரம் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் கற்பகம் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்பொழுது சாராயம் விற்க போகும் பெண்ணை பிடிக்கப் போகும் சீன் தான் படமாக்கினார்கள்.
அந்த சீனை படம் ஆக்கப்பட்ட பொழுது உடனே மானிட்டரில் அந்த காட்சியை வடிவேலு பார்த்துள்ளார் அப்பொழுது அவருடன் அந்த சீனில் நடித்த சக நடிகர் ஒருவர் அந்த காட்சியில் ஓவர் ரியாக்சன் கொடுத்துள்ளார் அதைப் பார்த்த வடிவேல் அவரிடம் சென்று நீ என்ன என்ன விட பெரிய நடிகனா ஓவர் ரியாக்ஷன் காட்டுற என சொல்லி சக நடிகரை வெளுத்து வாங்கி விட்டாராம், அடித்தே விட்டாராம். மீண்டும் அந்த சீனை எடுக்க சொல்லி தான் அடித்த நடிகரை யார் கண்ணுக்கும் தெரியாத வகையில் கடைசி வரிசையில் நிற்க வைத்து விட்டாராம் இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.