காமெடி என்றால் நாம் நினைவிற்கு முதலில் வருபவர் வைகை புயல் வடிவேல் தான். இவர் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான ராஜ்கிரண், ரஜினி கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார். ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் ஏராளமாக வந்தது அதில் நடிக்கவும் செய்தார்.
அப்படி இவர் நடித்த 23ஆம் புலிகேசி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததன் காரணமாக அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் இந்திரலோகத்தில் நான் அழகப்பன் தெனாலி போன்ற படங்களும் வெற்றி பெற சினிமா உலகில் வெற்றியை மட்டுமே கண்டு ஓடிய வடிவேலுக்கு ஒரு பிரச்சனை வந்தது. தயாரிப்பு சங்கம் இனி வடிவேலுவை வைத்து படம் பண்ண கூடாது என ஒரு புதிய கட்டளையை போட..
கடந்த நான்கு வருடங்களாக சினிமா உலகில் நடிக்காமல் வடிவேலு இருந்தார் ஒரு வழியாக அந்த பிரச்சினையில் இருந்து வெளிவந்து தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் இதனால் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வடிவேலு ரெடியாக இருப்பதாக தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலு பற்றிய செய்திகள் இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் படிக்காதவன் இந்த படத்தில் விவேக் அசால்ட் ஆறுமுகம் என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது வடிவேலு தான். ஏன் இந்த படத்தில் இருந்து அவர் விலகினார் என்பது குறித்து தற்போது தகவலும் கிடைத்துள்ளது அதாவது ஆரம்பத்தில் இருந்தே இயக்குனரின் பேச்சை கேட்காமல் வடிவேல் கெத்தாகவே இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த படத்தில் சுமன் காலை பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டும் என சொல்லி உள்ளனர் அப்படியெல்லாம் செய்ய முடியாது என தெனாவட்டாக பதில் அளித்தார். மேலும் அந்த படத்தின் பொழுது தனுஷ் வடிவேலுக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. கடைசியாக ஒரு கட்டத்தில் வடிவேலு அந்த படத்தில் இருந்து விலகினார். இதனை அந்த படத்தில் நடித்த மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டியில் ஓப்பனாக பேசியிருந்தார்.