என்னால அந்த நடிகருக்கு கால் அமுக்கிவிடுற மாதிரி நடிக்க முடியாது என வடிவேல் ரிஜெக்ட் செய்த திரைப்படம்.! அதன் பிறகு இந்த லெஜென்ட் நடித்தார்

vadivelu
vadivelu

பொதுவாகவே ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றால் அந்த காட்சியை நீக்கி விடுகிறார்கள் இல்லையென்றால் அந்த படத்தில் இருந்து விலகி வடுகிறார்கள்.மேலும் ஒரு சிலர் கால்ஷீட் பிரச்சனை மற்றும் சம்பளப் பிரச்சனை இயக்குனரிடம் கருத்து வேறுபாடு என்று அந்த படத்தில் இருந்து விலகி விடுகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் வடிவேலு தான் நடிக்க இருந்தார் அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலுவின் காட்சிகளும் பாதி படமாக்கப்பட்டது.

மேலும் நடிகர் வடிவேலு கால்சிட் நாட்களை அதிகப்படுத்துவதற்காக அதிக டேக்குகள் வாங்குவார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் படிக்காதவன் திரைப்படத்திலும் இதேபோல அதிக டேக்குகள் வாங்குவதால் இயக்குனர் படபிடிப்பில் கத்தியதாகவும் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் நடிகர் வடிவேலு அந்த இயக்குனரை பார்த்து முறைத்து உள்ளார் அதன் பிறகு இயக்குனர் சொல்லி கூட கேட்காமல் அதிக டேக்குகள் வாங்கியதால் நடிகர் தனுஷ் இயக்குனர் தான் சொல்றார்ல ஏன் அண்ணா இப்படி பண்றீங்க என்று வடிவேலை பார்த்து கேட்டுள்ளார் அதற்கு வடிவேலு அவர்கள் தனுசையும் பார்த்து முறைத்துள்ளார்.

vadivelu
vadivelu

பின்னர் அந்த காட்சியை நடித்து முடித்துள்ளார். அதன் பின்னர் நடிகர் விவேக் அவர்கள் சுமன் காலைப்பிடித்து அமுக்கும் காட்சியை நடிகர் வடிவேலுவிடம் கூறியிருக்கிறார் அதற்கு வடிவேலு நான் அவர் காலை எல்லாம் பிடிக்கும் காட்சியில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வயிற்று வலி என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார் பின்னர் யாருக்கும் தெரியாமல் சென்னை திரும்பி விட்டார். வடிவேலு இல்லாததால் அந்த படத்தைப் பாதியில் நிறுத்தி பட குழுவினரும் சென்னை திரும்பினார். அதன் பிறகு நடிகர் விவேக்கை சந்தித்து இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.  அதன் பிறகு நடிகர் விவேக்கை வைத்து முழு படத்தையும் எடுத்துள்ளனர்.

மேலும் இந்த படம் வெளியாகி விவேக்கின் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அது மட்டுமில்லாமல் அவர் நடித்துள்ள ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு சிரிப்பூட்டும் விதமாக அமைந்துள்ளது என்று மீசை ராஜேந்திரன் தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.

vivek
vivek