பாலா – சூர்யா இணையும் படத்தை விட “வாடிவாசல்” படத்தின் அப்டேட் மிரட்டும் வகையி்ல் இருக்குமாம்.!

surya
surya

அண்மையில் நடிகர் சூர்யா பாண்டிராஜ் உடன் கை கோர்த்தது நடித்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களும் இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதால் வசூலிலும் நல்லதொரு வேட்டையை நடத்தி வருகிறது. இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து சூர்யா பாலாவுடன்  இணையும் படத்திற்கான வேலைகளில் தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறதாம் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா,  கீர்த்தி ஷெட்டி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறது இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மூன்று,  நான்கு மாதத்திலேயே இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட வேண்டும் என சூர்யாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஏனென்றால் சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் மூன்று, நான்கு திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றதாம். இப்போ அறிவித்த பாலா – சூர்யா கூட்டணி அடுத்தடுத்த தகவல்களை . கொடுத்து வருகிறது ஆனால் இதற்கு முன்பாகவே சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி வாடிவாசல் திரைப்படத்தின் மூலம் இணைய உள்ளனர் என்ற செய்தி வெளியாகியது.

அதன்பிறகு எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்து வருகிறது இதனால் ரசிகர்கள் நீங்கள் இருவரும் இணையும் வாடி வாசல் படத்தின் படப்பிடிப்பு அவ்வளவு தானா என கேட்டுள்ளனர் அதற்கு இல்லை நிச்சயம் ஜூலை மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் வெற்றிகரமாக தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போனது மற்றும் அப்டேட்டுகள் கொடுக்க முடியாமல் போனது குறித்தும் தகவல்கள் வெளிவருகின்றன.

அதாவது இந்த படத்திற்கு சுமார் 100 காளைகள் மற்ற ஏரியாக்களில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு ஒரு சில கதைகளை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் அதேசமயம் அந்த காளைகளுக்கு பயிர் கொடுக்க இருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த காரணத்தினால் வாடிவாசல் தள்ளிக்கொண்டே போகிறது நிச்சயம் 2023 பொங்கலென்று வாடி வாசல் திரைப்படம் வெளியாகும் என படக்குழு திட்டம் போட்டு உள்ளதாம்.அதேசமயம் வாடிவாசல் படத்தின் அப்டேட் ஒன்றும் மிரட்டும் வகையி்ல் இருக்கும் எனவும் தெரிய வருகின்றன.