வாடி வாசல் திரைப்படம் என்ன ஆனது.! அதிரடி தகவலை பதிவிட்ட தயாரிப்பாளர்.!

surya
surya

வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது மூலம் தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சூர்யா.

இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் நல்ல வரவேற்பும் நல்ல விமர்சனமும் பெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யா அடுத் அடுத்த திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

அந்த வகையில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகப் போகும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் சமீபத்தில் இந்த படம் வெற்றி மாறனுக்கு கைவிடப்பட்டது என்று பல தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது.

அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அந்த தகவல் என்னவென்றால் எண்ணியதை எண்ணியபடி சொல்லியது சொல்லியபடி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் வளம் வரும் வாகை சூடும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இவர் பகிர்ந்த தகவல் சூர்யாவின் ரசிகர்கள் மத்தில் வைரலாகி வருகிறது.