தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் சந்தானம் சமீப காலங்களாக இவர் ஹீரோவாக நடித்துவரும் நிலையில் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் நடித்த ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற முடிவுடன் இருந்து வந்த சந்தானம் தற்பொழுது சில திரைப்படங்களில் காமெடி நடிகராக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இதனை அடுத்து ஹீரோவாகவும் நடித்து கலக்கி வரும் இவர் தற்பொழுது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மேக ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனை அடுத்து மறுபுறம் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் திக் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இரண்டாவது முறையாக நடிகர் சந்தானம் கார்த்திக் யோகியுடன் இணைந்து வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதற்கு முன்பு இவர்களுடைய கூட்டணியில் டிக்கிலோனா திரைப்படம் பெரியாகி நல்ல வரவேற்பினை பெற்றது இந்த படத்தினை வீட்டில் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
மேலும் இவர்களை அடுத்து இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ் பாஸ்கர் ரவி, மரியா மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷி இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் ஏராளமான பிரபலங்களின் கூட்டணியில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் பேட்ட, பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த மேக ஆகாஷ் இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அது குறித்த போஸ்டர் தற்பொழுது படக்குழுவினர்களின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.