வடசென்னை படம் 2012 – ல் சிம்பு மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவர வேண்டிய படம் – உருவாகாமல் போனதற்கு யார் காரணம் தெரியுமா.?

vada-chennai
vada-chennai

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பிரபலங்களுக்கு எப்பொழுதும் ஒரே ஆசை நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை பல வருடங்களாக பல நடிகர்களுக்கு இருந்து வந்துள்ளது அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியவர்களை தொடர்ந்து இந்த லிஸ்டில் இணைந்துள்ள அவர்கள்தான் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு.

இப்படி ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நடிகர்கள் உச்சத்தில் இருக்க ஆசைப் படுகின்றனர் இது ஒரு பக்கம் இருந்தாலும், அதையெல்லாம் மறந்துவிட்டு நட்பின்  காரணமாக  இணைந்து ஒன்றாகவே சேர்ந்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் அஜித் – விஜய் ரஜினி – கமல்  ஆகியவர்கள் நடித்துள்ளனர் அந்த லிஸ்டில் தனுஷும் சிம்புவும் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனா அது இதுவரை நடந்ததே இல்லை. ஆனால் அதற்கான முயற்சியை 2012 -ல் தொடங்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். வடசென்னை படத்தை 2012ஆம் ஆண்டு உருவாக்கியிருந்தது இதில் நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் நடித்திருந்தனர் தனுஷை வைத்து ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாம் ஆனால் சிம்பு  காளை படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

பின் அமெரிக்காவுக்கு சென்றதால் அவர் நடிக்க முடியாமல் போனது இதனால் அந்த படத்தை அப்போது வெற்றிமாறன் கைவிட்டார் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் மீண்டும் அந்த படத்தை தொடங்க ஆரம்பித்தார். இப்பொழுதும் தனுஷ் மற்றும் சிம்புவை வைத்து வெவ்வேறு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்க முயற்சி காட்டினார்.

தனுஷுக்கு நிகராக இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க அதிக முயற்சிகள் செய்தார் ஆனால் அந்த வாய்ப்பும் நிறைவேறாமல் போக வடசென்னை படத்தில் வேறு ஒருவரை வில்லனாக போட்டு தனுஷ் ஹீரோவாக நடித்ததாக கூறப்படுகிறது.