வடசென்னை திரைப்படத்தில் மிரட்டலாக இருந்த ராஜன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த வில்லன் நடிகர் தான்.! வெற்றிமாறனே கூறிய தகவல்

vadachennai
vadachennai

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி வாகை சூடியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இவர் இயக்கத்தில் வெளியாகிய பொல்லாதவன், வடசென்னை,  அசுரன், ஆடுகளம், விசாரணை  ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.

அதிலும் அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து பல சாதனைகளை நிகழ்த்தியது இந்த நிலையில் தனுஷின் வடசென்னை திரைப்படத்தில் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவலை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி வட சென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக வெற்றிமாறன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஆனால் அது நடக்கவில்லை இதனையடுத்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி விடுதலை படத்தில் வாத்தியாராக நடித்து வருகிறார்.

அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி வந்தது இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெற்றிமாறனை பேட்டி எடுத்துள்ளார் அப்பொழுது அந்த பேட்டியில் வெற்றிமாறன் கூறியதாவது வடசென்னை படத்தில் கடைசி நிமிடத்தில் இயக்குனர் அமீரை நடிக்க வைத்தோம் என வெளிப்படையாக கூறியுள்ளார் விஜய்சேதுபதி தான் நடிப்பதாக இருந்தது ராஜன் கதாபாத்திரத்தில்.

vijay-sethupathi
vijay-sethupathi

ஆனால் சூட்டிங் போக வேண்டிய நேரத்தில் அவருக்கு வேறு கமிட்மெண்ட் வந்து விட்டதால் அதில் நடிக்க முடியவில்லை இதனையடுத்து ரவிதேஜாவை அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கேட்டேன் அவர் புதுச்சேரியில் சூட்டிங்கில் இருந்ததால் அவருக்கு கதை பிடித்து இருந்தது ஆனால் தெலுங்கில் அவர் நடித்து வந்த தேதியுடன் ஒத்துப் போகாததால் அமீரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க செய்தோம்.

அதன்பிறகு அமீரை சந்தித்து மற்றவர்கள் இயக்கத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு எப்படி இருக்கிறது என கேட்டோம் ஆனால் அமீர் அது யார் படம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது என வெளிப்படையாக கூறினார். உடனே வெற்றிமாறன் நான் ஒரு படத்தை இயக்கி வருகிறேன் அதில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார் உடனே அவரும் ஓகே சொல்லிவிட்டார். நான் இயக்குனராக இருந்தால் இந்த திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் நீங்கள் ஏன் என்னை நடிக்க வைக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டுள்ளார் அமீர்.

அதற்கு வெற்றிமாறன் இந்த கதைக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் என கூறியுள்ளார் முதல் மூன்று நாட்கள் சந்தேகத்துடன் அமீர் நடித்தார் இதற்கு நான் சரிப்பட்டு வருவேணா  என சந்தேகம் அவருக்குள் இருந்தது அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் அமீரை  தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்பதை தென்னந்தேளிவாக காட்சிகள் காட்டிவிட்டது. வாடா  சென்னை திரைப்படத்தில் வெற்றிமாறனுடன் நடிக்க முடியாமல் போனதால் தற்பொழுது விடுதலைப் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் இந்த கதாபாத்திரமும் வெயிட்டான கதாபாத்திரமாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.