உங்கள் சத்தம் வெற்றிமாறனுக்கு கேட்கட்டும் கண்டிப்பா வடசென்னை- 2 உண்டு.! மேடையிலேயே கூறி அறங்கையை அதிர வைத்த தனுஷ்…

vada-chennai
vada-chennai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்பொழுது வாத்தி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

வாத்தி திரைப்படத்திற்காக பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் கலந்து கொண்டார். அதேபோல் சன் தொலைக்காட்சியில் வாத்தி பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் வாத்தி திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலையும் பாடி அசத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் தன்னுடைய இரண்டு மகன்கள் நல்ல நண்பர்கள் என கூறினார்.

அந்த நிகழ்ச்சியை  திவ்யதர்ஷினி தொகுப்பாலிணியாக இருந்தார்  அப்பொழுது ரசிகர்கள் பலரும் வடசென்னை இரண்டாவது பாகம் எப்பொழுது என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்கள். அதனை காதில் வாங்கிய தனுஷ்  இந்த சத்தம் வெற்றிமாறன் ஆபீசுக்கு கேட்கட்டும். அவர் மனசு வைத்தால் வடசென்னை இரண்டாவது பாகம் கண்டிப்பாக வரும் என மேடையிலேயே கூறி மேடையை அதிர வைத்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படம் வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டு கால வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்ட கதை ஆகும் இந்த திரைப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, அமீர் டேனியல் பாலாஜி, கிஷோர் பவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனமும் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. மேலும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் தான் இசையமைத்திருந்தார் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் தனுஷ் திரை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் வடசென்னை இரண்டாவது பாகம் கண்டிப்பாக வரும் கொஞ்ச காலம் ஆகும் என கூறி மேடையை தனுஷ் அதிர வைத்தார்.