தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் நயன்தாரா என்றாலே தனிக்காட்டு ராஜாவாக தான் பார்க்கப்படுகிறது ஏனென்றால் தற்பொழுது மற்ற நடிகைகளை விடவும் நயன்தாரா தான் டாப்பில் இருந்து வருகிறார்.
தற்பொழுது இவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது காதலனுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்கள் அளவுக்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகை நயன்தாரா மட்டும் தான்.
இப்படிப்பட்ட இவர் கொரோனா நிவாரணம் உதவியாக இதுவரையிலும் ஒரு ரூபாய் கூட தராத காரணத்தினால் ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா இரு தினங்களுக்கு முன்பு தனது காதலருடன் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அந்த புகைப்படம் தான் இரண்டு தினங்களாக சோஷியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று ரசிகர் ஒருவர் நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை ஜூம் செய்து நீங்கள் ஊசியை போடவில்லை ஏன் இந்த பித்தலாட்ட வேலை என கூறியிருந்தார்.
இவரைத் தொடர்ந்து இன்னும் பல ரசிகர்களும் நயன்தாராவை திட்டி வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி கொடுக்கும் வகையில் நயன்தாரா வேறு கோணத்திலிருந்து ஊசி போட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நர்ஸ் தனது கையை வைத்து ஊசியை மறைத்துக் கொண்டால் சரியாக அந்த உச்சி தெரியவில்லை. எனவே தற்பொழுது வேறு ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படத்தில் தெளிவாக ஊசி போடுவது தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்.