லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது. இந்த திரைப்படத்தில் சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன் ஸ்ரீநாத், மாஸ்டர் மகேந்திரன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.
கடந்த ஜனவரி 14ம் தேதி வெளியாகிய இந்த திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பத்து நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியது. இதற்கு முன் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மெர்சல், சர்கார் பிகில் ஆகிய திரைப்படங்களும் 200 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து வீடியோ பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தநிலையில் வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ பாடல்.