இரண்டே நாளில் போட்ட காசை எடுத்த தனுஷின் “வாத்தி” – மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

dhanush-
dhanush-

நடிகர் தனுஷ் தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் இப்போ வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் கோலாகலமாக கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, கென் கருணாஸ், சாய் குமார்..

ஆடுகளம் நரேன், இளவரசு, tanikella bharani என பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது முதல் நாளே 10 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.

குறிப்பாக தெலுங்கில் இந்த படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்து வந்துள்ளது முதல் நாள் மட்டுமே ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. தொடர்ந்து இந்த படத்திற்கான விமர்சனம் பாசிட்டிவாக இருப்பதால் வாத்தி திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் மிகப்பெரிய ஒரு வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் வாத்தி திரைப்படம் இரண்டு நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இரண்டாவது நாளில் சுமார் 18 கோடி வரை வசூலித்து இருக்கிறது மொத்தத்தில் நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் 28 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் அள்ளி இருக்கிறது.

வருகின்ற நாட்களிலும் வாத்தி படத்தின் வசூல் குறையாது என சொல்லப்படுகிறது இதனால் படகுழுவும் சரி, தனுஷும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். அஜித், விஜய் படங்களுக்கு பிறகு  தனுஷ் படம் தான் அதிக வசூல் செய்து வருவதாக ரசிகர்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.