தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த மாதம் வெளியாகியது. இதில் திருச்சிற்றம்பலம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் கடுமையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார் நடிகர் தனுஷ். நானே வருவேன் திரைப்படத்தின் தோல்வியை வாத்தி திரைப்படத்தின் மூலம் சரிகட்ட நினைக்கும் தனுஷ் இந்த படம் வெளியானால்தான் எப்படி இருக்கும் என்று தெரியும் என காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பட குழு. மேலும் வாத்தி திரைப்படம் டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது இதனை தொடர்ந்து ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் வாத்தி திரைப்படம் வெற்றி அடையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இவனை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வாத்தி திரைப்படத்திள் இருந்து அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இதனை தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.