“வாத்தி” திரைப்படத்தின் முதல் விமர்சனம் – பாசிட்டிவா.. நெகட்டிவா..

dhanush-
dhanush-

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த வந்த திரைப்படம் வாத்தி.. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் மாறுபட்ட நடிப்பில் இந்த படத்தில்உருவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுதா மேனன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமுத்திரக்கனி, சாய்குமார், இளவரசு, ஆடுகளம் நரேன், ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். வாத்தி படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அண்மையில் ஆடியோ லான்ச் பெருசாக நடத்தியது இதில் நடிகர் தனுஷ் வாத்தி படம் குறித்தும், தனது ரசிகர்களுக்கு சில அன்பு கட்டளையையும் வைத்து பேசி இருந்தர்.

அதனை தொடர்ந்து வாத்தி படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்தது. ட்ரைலரில் தனுஷ் ஒரு வாத்தியாராக தென் படுகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது மேலும் கல்வியை வைத்து பணம் பார்க்கும் ஒரு கூட்டத்திற்கு எதிராக அவர் சண்டை போடுவது பெரிய அளவில் காண்பிக்கப்பட்டது.

இதனால் இந்த படம் பெரிய அளவில் பேசும் என பலரும் சொல்லி வந்தனர்.  ஆனால் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்த  நிலையில் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. படத்தை பார்த்த சிலர் சொல்லுவது என்னவென்றால்..

தனுஷின் வாத்தி திரைப்படம் வெரி வெரி எமோஷனல் அண்டு  Gripping படம் என்றும், ஒரு சிலர் படம் முழுக்கவே எமோஷனலால் நிறைந்து இருக்கிறது இந்த படம் பல விஷயங்களை வெளிப்படையாக சொல்லி உள்ளது என கூறி கமென்ட் அடித்து வருகின்றனர் மேலும் ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு முக்கியமாக ஸ்கோர் செய்கிறது என சொல்லுகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்..