100 கோடியை நோக்கி பயணிக்கும் தனுஷின் வாத்தி.. 4 நாட்கள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

vaathi
vaathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன் படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது இதனால் அடுத்த படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என கருதிய தனுஷ். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன்  கைகோர்த்து “வாத்தி” திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் ரிலீஸ் ஆகுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டாலும் ஒரு வழியாக அதை எல்லாம் தகர்த்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ், ஆடுகளம் நரேன், சாய்குமார் என மிகப் பெரிய திரைபட்டாளமே நடித்திருந்தது.

வாத்தி  படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் குழந்தைகள் ரசிகர்கள் மற்றும் குடும்பம் என அனைவரும் போட்டி போட்டு பார்த்து கண்டு களித்து வருகின்றனர் மேலும் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனத்தை வைக்கின்றனர் இதனால் அனைத்து இடங்களிலும் வாத்தி படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

குறிப்பாக தமிழை தாண்டி தெலுங்கில் நல்ல வசூல் வேட்டை ஆடி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வாத்தி திரைப்படம் 4 நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் தனுஷின் வாத்தி திரைப்படம் 4 நாட்கள் முடிவில் மட்டும் சுமார் 55 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறதாம்.

மூன்றே நாளில் போட்ட காசை எடுத்து விட்டதால் இனி வருவதெல்லாம் வாத்தி படத்திற்கு லாபம் என சொல்லப்படுகிறது இதனால் வாத்திபடக்குழு செம்ம உற்சாகத்தில் இருப்பதோடு நிச்சயம் 100 கோடியை தொட்டு ஹிட் லிஸ்ட்டில் இணையும் என நம்பி உள்ளது.