vaani bhojan latest video viral in social media: சன் டிவியில் ரசிகர்களால் கவரப்பட்ட ஒரு சீரியல் என்றால் அது தெய்வமகள் சீரியல் தான் இந்த சீரியலை இளசுகள் முதல் பெருசுகள் வரை விரும்பி பார்த்து மகிழ்ந்தார்கள் அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளை இழுத்துப்போட்டவர் தான் நடிகை வாணி போஜன்.
இவ்வாறு சின்னத்திரையில் பல்வேறு ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை தற்போது வெள்ளித்திரை பக்கமும் உலாவ ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் கடந்த ஆண்டு அசோக் செல்வன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தான் வாணிபோஜன் முதன் முதலாக அறிமுகமானார்.
இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அதன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்பையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து ஜெய்யுடன் டிரிபல்ஸ்ஸ் மற்றும் வைபோவுடன் லாக்கப் மற்றும் மலேசியா டு அம்னீசியா ஆகிய திரைப்படங்களில் வாணி போஜன் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சின்னத்திரையில் நயன்தாரா என்று பெயர் போனது மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் அவருடைய இடத்தை பிடிக்க அயராது போராடி வருகிறார். அந்த வகையில் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது இணையத்திலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சிகப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் மட்டும் அல்லாமல் இந்த வீடியோசமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
#VaniBhojan pic.twitter.com/vPhcYLdy0S
— Tamil360Newz (@tamil360newz) July 25, 2021