வாலி சொலியை முடிக்க கண்ணதாசனின் உதவியாளர் கொடுத்த மகா மட்டமான யோசனை.. ஓங்கி அறைந்து என்ன சொன்னார் தெரியுமா…?

vali kannadhasan
vali kannadhasan

vaali kannadasan : வாலி முதலில் ஒரு சில திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்தார் அதன் பிறகு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாத நேரத்தில் எம்ஜிஆரின் ஆசன கவிஞராக உள்ளே வந்தார். வாலி பாடல்கள் இன்றளவும் பல ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது ஒரு காலகட்டத்தில் கண்ணதாசனின் பாடல்கள் மூலம் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டு பிறகு சிறிது காலத்திலேயே கண்ணதாசனுக்கு போட்டியாக கவிஞர் வாலி வளர்ந்தார்.

இருவருக்கும் தொழில் ரீதியான போட்டி இருந்து வந்தது என்னதான் தொழில் ரீதியாக போட்டியாக இருந்தாலும் இருவரும் நட்புடன் தான் பழகி வந்தார்கள் இவர்கள் இருவருக்கும் இடையே ஆன நட்புக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வாலி தவித்து வந்தார் அந்த சமயத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட தயாரானார் அப்பொழுது கண்ணதாசனின் ஒரு பாடலைக் கேட்டு தான் மீண்டும் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார்.

லோகேஷ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்.. ஹீரோ இவரா.? வெளியான அறிவுப்பு

தீவிர முயற்சிக்குப் பிறகு வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது முதலில் சில திரைப்படங்களுக்கு பாடலை எழுதிய வாலி ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர் கண்ணதாசன் இடையே விரிசல் ஏற்பட்ட பொழுது எம்ஜிஆர் இன் ஆஸ்தான கவிஞராக உள்ளே நுழைந்தார் அதன் பிறகு வாலி எம்ஜிஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் அதேபோல் பல மேடைகளில் கண்ணதாசன் பாடலை வாலி விமர்சிப்பதும் வாலியின் பாடலை கண்ணதாசன் விமர்சிப்பதும் பல சம்பவம் நடந்துள்ளது.

பகலில் இப்படி இருந்தாலும் இரவில் மது கோப்பையுடன் ஒன்றாக தான் இருப்போம் எனக் கூறி இருந்தார் வாலி அப்படிதான் 1972 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் வெள்ளி விழா ஆண்டு வந்தது அப்பொழுது திரை துறையை சேர்ந்த அனைவருக்கும் சென்னையில் பிரபல ஹோட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் இந்த விருந்திற்கு கண்ணதாசன் வாலிக்கு அழைப்பு விடுத்துள்ளார் வாலி உட்பட அனைத்து பிரபலங்களும் விருந்துக்கு வந்திருந்தார்கள்.

இதில் ஒரு சில திரைப் பிரபலங்கள் விலை மாதுவுடன் வந்திருந்தார்கள் அப்படி இந்த ஹோட்டலுக்கு விலை மாது வந்தார்கள் அப்பொழுது கவிஞர் வாலி ஒருவருடன் ஒரு அறைக்கு சென்றார் அப்பொழுது கண்ணதாசனின் உதவியாளர் அறைக்கு வெளியே நின்று கொண்டு இப்பொழுது வாலி இங்கே இருக்கிறார் போலீசிடம் புகார் அளித்தால் வாலியை வந்து அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள் அதன் பிறகு எப்படி எம்ஜிஆர் க்கு பாடல் எழுதுவார் என கண்ணதாசனிடம் யோசனை கொடுத்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியா நடிக்க வைப்பாங்கன்னு பார்த்தா இப்படி தங்கச்சின்னு சொல்லிட்டாங்களே..! குமுறும் இளம் நடிகை.!

அதுமட்டுமில்லாமல் நமக்கு போட்டியே இருக்காது எனவும் ஐடியா கொடுத்துள்ளார் இதனைக் கேட்ட கண்ணதாசன் அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் எனக்கு யார் போட்டியாக இருந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன் ஏனென்றால் அவர் என்னை நம்பி இங்கே வந்திருக்கிறார் அவர் எனக்கு போட்டியாளராக இருந்தாலும் அவரை என்னுடைய தமிழால் நான் எதிர்ப்பேன் இப்படி முதுகில் குத்த மாட்டேன் என கூறினாராம்.

அதுமட்டுமில்லாமல் அவர் பத்திரமாக திரும்பி செல்ல வேண்டும் அவர் வெளியில் வந்து காரில் ஏறி பத்திரமாக வீடு செல்லும் வரை கூடவே இருந்து எனக்கு தகவல் சொல்ல வேண்டும் என கண்ணதாசன் உதவியாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார் இதை கதவிற்கு பின்புறம் நின்று கொண்டிருந்த வாலி கேட்டு விட்டு கதவை திறந்து தனது காரை நோக்கி புறப்பட்டார் பிறகு அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது இது குறித்து வாலி சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல youtube சேனலுக்கு வெளிப்படையாக கூறினார் என தகவல் கிடைத்துள்ளது.

எனக்கு இருக்கிற தில்லு ஈஸ்வரி கிட்ட இருக்கா.? குணசேகரனை அவமானப்படுத்தும் சாருபாலா.!