காளையை அடக்க ரெடியான முரட்டுக்காளை சூர்யா.! வெளியானது வாடிவாசல் படப்பிடிப்பு புகைப்படங்கள்.

vadivasal
vadivasal

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா இவர் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு போதிய திரையரங்கு கிடைக்காததால் தான் இந்த நிலைமை என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க இருக்கிறார். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது.

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் அருகே நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் அங்கு படப்பிடிப்பு நடந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vaadivasal
vaadivasal

வாடிவாசல்  படப்பிடிப்பிற்காக சென்னைக்கு 400 காளைகள் கொண்டுவரப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது மேலும் வாடிவாசல் படப்பிடிப்புக்காக ஆரம்பகட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் சூர்யா சில காளைகளுடன் பயிற்சி எடுக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது அதற்காக டெஸ்ட் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vaadivasal
vaadivasal